குடிநீர் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்
சோளிங்கர் அருகே குடிநீர் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்;
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ரெண்டாடி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்ைல என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று ரெண்டாடி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் அவர்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சுதாபாபு, சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இனிமேல் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.