பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-30 17:27 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்தோஷ்குமார், செந்தில் என்கிற புதியவன், வேல்முருகன், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தமிழழகன், ஆனந்த், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கேரள மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்