தர்மபுரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தர்மபுரி அருகே விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி செட்டிகரை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முரளி அந்த பகுதியில் உள்ள டீக்கடை பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.