கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,020 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,020 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,020 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.
கொரோனா தடுப்பூசி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 28-ம் கட்டமாக 1,020 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சி தேர்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பேரூராட்சி ரெட்கிராஸ் வளாக மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட 1,020 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் நடந்தது. இந்த மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரை மொத்தம் 55 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணையாக தடுப்பூசியை 49,641 பேரும், 2-வது தவணையை 10 ஆயிரத்து 85 பேரும் செலுத்தி கொண்டனர்.
முககவசம்
மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 15 லட்சத்து 2 ஆயிரத்து 300 பேர் ஆகும். இவற்றில் முதல் தவணை தடுப்பூசியை 13 லட்சத்து 35 ஆயிரத்து 882 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 9 லட்சதது 30 அயிரத்து 812 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டயமாக முக கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து காதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், தாசில்தார் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர்கள் தாமரைசெல்வி, விமல், சோமசுந்தரம், திலக் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.