காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் சப்பாணிப்பட்டி - கும்பாரஅள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு 3 பேர் சந்தேகப்படும் வகையில் நின்று இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குடியூரை சேர்ந்த ருத்ரான் (வயது 24), ராகுல், முத்துராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.