சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே செங்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கீதா (வயது 55).
இவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து கீதாவை கைது செய்தனர்.