செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு
செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு
காட்பாடி
காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ்காரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
ரெயில்களில் பயணிக்கும் பொழுது பயணிகள் செல்போன் பயன்படுத்துவது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து பெண் போலீசார் பறை இசைத்து நடனத்தின் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரெயில்வே பாதுகாப்பு படையின் துணை ஆணையர் ஏ.கே.பிரீத் கலந்து கொண்டார்.