சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-30 17:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பர நகர் பஸ்நிறுத்தம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குருஸ் திவாகர் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்