மயிலம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை கைது

மயிலம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-04-30 16:49 GMT

விக்கிரவாண்டி, 

மயிலம் அருகே ரெட்டனை கிராமத்தை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 56). தொழிலாளி. இவரது மகன் கன்னிக்குமார் (28). இவர் மதுகுடித்துவிட்டு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் கன்னிக்குமார்   அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனால்  ஆத்திரமடைந்த எட்டியப்பன், கன்னிக்குமார் தூங்கும் போது மரம் வெட்டும் கத்தியால்  அவரை வெட்டினார். கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர்,  புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.


 இது குறித்த  புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட எட்டியப்பனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்