அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு

காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு விருந்து வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2022-04-30 15:53 GMT
வாலாஜாபாத்,  

வாலாஜாபாத் தாலுகா, காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கம்பாக்கம் கிராமத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

இங்கு ஆண்டு தோறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒருநாள் அறுசுவை உணவு வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக அறுசுவை உணவு விருந்து வழங்கும் விழா நடைபெறாமல் இருந்தது.

தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் அறுசுவை உணவு விருந்து வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் இலை போட்டு, இனிப்பு, வடை, பாயாசம் உள்ளிட்ட அறுசுவை உணவினை அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு உணவினை வழங்குவது போல பாசத்துடனும் மாணவர்களுக்கு வழங்கினர்.

மேலும் செய்திகள்