ரவுடி படுகொலையில் 3 பேர் கைது

பெங்களூருவில் முன்விரோதத்தில் ரவுடியை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-04-30 15:41 GMT
பெங்களூரு:

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகம்மா நகர் 5-வது பிளாக்கில் வசித்து வந்தவர் சந்தோஷ்(வயது 28). ரவுடியான இவர் மீது சில போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் சந்தோசுக்கும், நாகம்மா நகரில் வசித்து வரும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகம்மா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் சந்தோஷ் அமர்ந்து இருந்தார்.

  அப்போது அங்கு சென்ற சிலர் சந்தோசிடம் தகராறு செய்ததுடன் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் 7 இடங்களில் சந்தோசுக்கு வெட்டு விழுந்தது. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சந்தோசை சிலர் மீட்டு சிகிச்சைக்காக கே.ஜி. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல்  அதிகாலை சந்தோஷ் இறந்தார். இதுகுறித்து கே.பி.அக்ரஹாரா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சந்தோஷ் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்