பெண்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பெண்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பெண்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
திறன் மேம்பாட்டு திட்டம்
பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு கைத்தறி தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி 45 நாட்கள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
சுய தொழில் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், பாராம்பரிய நெசவு தொழிலை விரிவுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கைரேகை பதிவை கொண்டு வருகை பதிவு செய்யப்படுகிறது. பயிற்சிக்கு 95 சதவீதம் வந்திருக்க வேண்டும்.
வங்கியில் கடன் பெறலாம்
பயிற்சியின் முடிவில் ரூ.13,500 அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசு மூலம் வரவு வைக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 6 சதவீத வட்டியில் ரூ.50 ஆயிரம் கடன் பெறலாம்.
அதில் ரூ.10 ஆயிரம் மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மத்திய அரசால் நெசவு தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். இந்த தொழிலை பெண்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.
கைத்தறி நெசவு மூலம் குடியரசு துணை தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் உருவங்களை தயாரித்து பரிசாக அனுப்பி உள்ளனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தையும் கைத்தறி நெசவு மூலம் தயாரித்து உள்ளனர்.
முதற்கட்டமாக 47 பேர் பயிற்சி பெற்று உள்ளனர். இவர்களை கொண்டு எழுச்சி உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டு, பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு நல்ல தரமான பொருட்களை தயாரித்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.