தேனியில் நடந்த விழாவில் 102 திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 10,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தேனியில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 102 திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 10,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

Update: 2022-04-30 14:44 GMT
தேனி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேனி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலையில்  நடந்தது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  இரவு தேனி மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் அவர் தங்கினார். 

கண்காட்சி அரங்குகள்

இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தேனியில் விழா நடக்கும் பந்தலுக்கு காலை 10.05 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் காரில் வந்து இறங்கினார். அவரை கண்டதும் மக்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு திரண்டு நின்ற மக்களை பார்த்து அவர் கையசைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.
அதன்பிறகு, மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் அவர் நடந்து சென்றார். அங்கு மக்கள் ஆர்வத்தோடு அவரிடம் கைகுலுக்க வந்தனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். பின்னர் விழா மேடையில் ஏறி, மக்களை பார்த்து கும்பிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து நடந்த விழாவில், தேனி மாவட்டத்தில் ரூ.114 கோடியே 21 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.74 கோடியே 21 லட்சம் மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் ரூ.71 கோடியே 4 லட்சம் மதிப்பில் 10 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
விழாவில் நலத்திட்ட உதவிகள் பெற வந்த பயனாளிகள் மற்றும் விழாவை காண திரண்டு வந்த பொதுமக்களுக்கு மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவருடைய பேச்சை கேட்டு திரண்டு நின்ற மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட கலெக்டர் முரளிதரன் நினைவு பரிசு வழங்கினார். விழா முடிந்தவுடன் அவர் தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு  சென்றார்.

முன்னதாக விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் பேசினர். மாவட்ட கலெக்டர் முரளிதரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

தங்கதமிழ்செல்வன்

இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், போடி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான எஸ்.லட்சுமணன், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, ஆணையாளர் சகிலா, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, தேனி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் எம்.செல்வம், தேனி ஒன்றியக்குழு தலைவரும், வடக்கு ஒன்றிய பொறுப்பாளருமான எம்.சக்கரவர்த்தி, துணைத்தலைவர் முருகன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஐசக்அய்யா, மாநில செயலாளர் லைப் கே.எஸ்.ஆர்.சரவணகுமார், சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள், துணைத்தலைவர் முத்துக்குமார், கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, துணைத்தலைவர் காஞ்சனா சிவமூர்த்தி,  சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் ஜெயந்தி சிவக்குமார், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன், கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் ஞானமணி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் வீரமுத்து, துணைத்தலைவர் மதுமிதா ஞானசெல்வம், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப்பிரமணி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தங்கபாண்டி, கம்பம் தி.மு.க. பிரமுகர் வக்கீல் எஸ்.கே.எம்.மணி, ஆண்டிப்பட்டி தி.மு.க. பிரமுகர் புல்லட் மாயி, போடி தி.மு.க. பிரமுகர் பரணி, சின்னமனூர் தி.மு.க. பிரமுகர் முத்துக்குமரன், தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன், தலைவர் மனோகரன். 

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன், உத்தமபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் முருகேசன், குமரன், உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம், அனுமந்தன்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், க.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுந்தரி பாஸ்கரன், கோம்பை பேரூராட்சி தலைவர் மோகன்ராம், துணைத் தலைவர் முருகன், பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர் லட்சுமி இளங்கோவன், தேவாரம் பேரூராட்சி தலைவர் லட்சுமி பால்பாண்டியன், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் முருகன், தேனி மாவட்ட ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் பால்ராஜ், கோகிலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, ராமசாமி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ், ஆனைமலையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்மணி மும்மூர்த்தி, தே.சிந்தலைச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி. 

பெரியகுளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எல்.எம்.பாண்டியன், பெரியகுளம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சின்னபாண்டியன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் குள்ளப்புரம் கே.எம்.முருகன், பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் துரைப்பாண்டி, கடமலை-மயிலை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், பெரியகுளம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
==========
இன்சைடு பாக்ஸ்
---------------
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்கள் விவரம்

தேனியில் இன்று நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் வருமாறு:-
தேனி அருகே தப்புக்குண்டு சாலையில் ரூ.89 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட தேனி அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மந்திச்சுனை-மூலக்கடை மற்றும் நாகலாபுரம், கொத்தப்பட்டி, கோகிலாபுரம், கோடாங்கிபட்டி, எ.புதுப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பொன்னன்படுகை, நரசிங்காபுரம், டொம்புச்சேரி, போ.அம்மாபட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், ரேஷன் கடை கட்டிடங்கள், ஜி.கல்லுப்பட்டி முதல் காமக்காபட்டி வரையும், அம்மாபட்டி முதல் விசுவாசபுரம் வரையும் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்பட ரூ.5 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பணிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் குன்னூர், மார்க்கையன்கோட்டை, சிலமலை பகுதிகளில் ரூ.11 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதி கட்டிடங்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஜி.கல்லுப்பட்டி, பெரியகுளம், பூதிப்புரம், மேலசிந்தலைச்சேரி, எருமலைநாயக்கன்பட்டி, அம்மாபுரம், தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.7 கோடியே 62 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள், குடிநீர் வசதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் போடியில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி தளம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்