புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பெரிய தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது கணேசன் (வயது 52) என்பவர் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த 21 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.