இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை திருவிழாவில் அய்யா வைகுண்டர் இந்திர வாகனத்தில் வீதிஉலா சென்றார்.;

Update: 2022-04-30 14:29 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை திருவிழா  4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் பணிவிடை, அன்னதர்மம் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-ம் நாள் காலையில் பணிவிடை, மதியம் வெளியூர் தர்மம், இரவு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 3-ம் நாள் காலையில் பணிவிடை, மதியம் உள்ளூர் தர்மம், இரவு அய்யா அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 4-ம் நாள் காலையில் பணிவிடை, இரவு அய்யாவின் அகிலதிரட்டு பாராயணஉரை, கும்மிடிபூண்டி துளசிபதி அருளாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் அய்யாவின் அன்புகொடி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்