அ.தி.மு.க. அலுவலகத்தில் நீர், மோர் பந்தல்

கடலூர் பாதிரிக்குப்பம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத் திறந்து வைத்தார்.

Update: 2022-04-30 14:29 GMT
கடலூர், 

கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோடை வெயில் காலத்தையொட்டி நீர், மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் பாதிரிக்குப்பம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ஆதிநாராயணன், துணை செயலாளர்கள் கல்யாணி ரமேஷ், வேல்முருகன், பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி கிரிஜா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழ வகைகள், பழச்சாறு வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார், ஒன்றியக்குழு தலைவர் தெய்வ பக்கிரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மீனவரணி துணை செயலாளர் தங்கமணி, இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, ஒன்றிய இணைச் செயலாளர் லட்சுமி குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகமுத்து, தேவநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்