முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக செல்போன் கோபுரத்தில் ஏறிய கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக செல்போன் கோபுரத்தில் ஏறிய கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்;
வத்தலக்குண்டு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக செல்போன் கோபுரத்தில் ஏறிய கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அவருடைய மகன் குருசங்கர் (வயது 22). கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார்.
நேற்று காலை இவர், தி.மு.க. கட்சி கொடி நிறத்திலான துண்டை அணிந்தபடி வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டிக்கு வந்தார். பின்னர் தேனி-திண்டுக்கல் சாலையோரத்தில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் விறு, விறுவென ஏறினார்.
100 அடி உயரம் வரை ஏறிய அவர் அங்கேயே ஒரு இடத்தில் நின்று கொண்டார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
முதல்-அமைச்சரை பார்க்க...
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். ெசல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு குருசங்கரை போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.
தேனியில் நடந்த விழாவை முடித்து விட்டு, திண்டுக்கல்லுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வழியாக வருகிறார். அவரை செல்போன் கோபுரத்தில் இருந்தபடி பார்த்து விட்டு, கீழே இறங்கி விடுவதாக போலீசாரிடம் குருசங்கர் கூறினார்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்களும், குருசங்கரின் தந்தை ராமமூர்த்தியும் விரைந்தனர்.
கைது-பரபரப்பு
குருசங்கரின் செல்போனில் தொடர்பு கொண்டு ராமமூர்த்தியும், தீயணைப்பு படையினரும் பேசினர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்க்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து விட்டு தான் கீழே இறங்குவேன் என்று திட்ட வட்டமாக குருசங்கர் தெரிவித்தார். தன்னை செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்குவதற்கு கட்டாயப்படுத்தினால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என்று அவர் தற்கொலை மிரட்டலும் விடுத்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியை கடந்து சென்று விட்டார். சிறிதுநேரத்தில் செல்போன் கோபுரத்தில் இருந்து குருசங்கர் தாமாகவே கீழே இறங்கி வந்து விட்டார்.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குருசங்கரை கைது செய்தனர்.