கஞ்சா கடத்திய 3 பேர் கைது

திருத்தணிக்கு கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-30 13:12 GMT
திருத்தணி,  

ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்துவதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா பகுதியிலிருந்து சந்தேகபடும்படி நடந்து வந்துகொண்டிருந்த 3 பேரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர், அப்போது அவரிகளிடத்தில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கஞ்சா கடத்தியவர்களிடம் விசாரானை நடத்தியதில் அவர்கள் திருத்தணி நேரு நகர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 22), லோகேஷ்(21), மற்றும் ஆஸாம் முகமது(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்