முக்கொம்பு காவிரி மேலணையில் பிணமாக கிடந்த மாணவர்

முக்கொம்பு காவிரி மேலணையில் மாணவர் பிணமாக கிடந்தார்.

Update: 2022-04-29 23:15 GMT
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி முக்கொம்பு காவிரி மேலணையில் சிறுவன் ஒருவன் பிணமாக தண்ணீரில் மிதப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பிணமாக மீட்கப்பட்ட சிறுவன் திருச்சி பெரியகடை வீதி, சந்துகடை பகுதியை சேர்ந்த நந்தகுமாரின் மகன் ஜெயராஜ்(வயது 15) என்பதும், இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள இ.ஆர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்ததும், தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஜெயராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு ேபாலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்