வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் குத்திக்கொலை; மனைவியிடம் போலீஸ் விசாரணை

பெங்களூருவில் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-29 22:40 GMT
பெங்களூரு:

தனியார் நிறுவன ஊழியர்

  பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.கே.நகர் பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் ரெட்டி (வயது 35). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். சங்கர் ரெட்டிக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பிய சங்கர் ரெட்டி, மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்.

  இந்த நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டில் ஒரு அறையில் சங்கர் ரெட்டி பலத்த கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அவரது மனைவி யஷ்வந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சங்கர் ரெட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரது கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மனைவியிடம் விசாரணை

  இதுபற்றி சங்கர் ரெட்டியின் மனைவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்மநபர் தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார். இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு மர்மநபர் தன்னிடம் இருந்த கத்தியால் தன்னையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார் என்று போலீசாரிடம் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  அந்த மர்மநபர் யார்? சங்கர் ரெட்டியை கொலை செய்ய காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சங்கா் ரெட்டியின் மனைவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்