தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-29 20:42 GMT
சேலம்:-
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் மகள் ராஜேஸ்வரி (வயது 21). இவர், சேலத்தில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நர்சுகள் தங்கும் விடுதியில் ராஜேஸ்வரி தூக்கில் தொங்கியதாக தெரிகிறது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ராஜேஸ்வரியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்