மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு

ஒரத்தநாடு அருேக ஓடும் பஸ்சில் 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-29 20:36 GMT
ஒரத்தநாடு;
ஒரத்தநாட்டை அடுத்துள்ள அரசப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் தேசிகாமணி. இவருடைய மனைவி சரோஜா(வயது60), இவர் சம்பவத்தன்று தஞ்சாவூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.  நெய்வாசல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது சரோஜா தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் ஓடும் பஸ்சில் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்