மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டது

சிவகாசியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டது.

Update: 2022-04-29 19:59 GMT
சிவகாசி, 
சிவகாசியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டது. 
மழைநீர் வடிகால் 
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டில் அண்ணா காலனி, சிவன்கோவில் நந்தவன தெரு ஆகியவை உள்ளது. 
இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீர் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வழியாக கடந்த காலங்களில் வெளியேறி வந்தது. நாளடைவில் இந்த வடிகால் போதிய பராமரிப்பு இன்றி மண்மேவி கிடந்தது. 
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதற்கிடையில் இந்த மழைநீர் வடிகாலை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி தி.மு.க. கவுன்சிலர் வெயில்ராஜ், மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். 
25 ஆண்டுகள்
அதன்படி அந்த மண் அள்ளும் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. இது குறித்து கவுன்சிலர் வெயில்ராஜ் கூறியதாவது, அண்ணாகாலனி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டது. அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் தூர்வாரப்படாமல் இருந்தது.
 தற்போது மாநகராட்சி நிர்வாகம் தூர்வார உத்தரவிட்டு பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இப்பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்