முருகன் கோவிலில் பாலாலயம்

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிவில் நேற்று பாலாயம் நடந்தது.

Update: 2022-04-29 19:58 GMT
நெல்லை:

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில், தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள குடவரைக் கோவிலாகும். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற உள்ளதால் நேற்று பாலாலயம் நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, யாக பூஜை, கும்ப பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பாலாலய விழா சிறப்பு பூஜை நடந்தது.
இதைத்தொடர்ந்து கும்பங்கள் கோவில் உள்பிரகாரம் வலம் வந்ததை தொடர்ந்து, பாலாலயம் செய்யப்பட்ட சுவாமிகளுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கோவிலை சுற்றியுள்ள பழனியாண்டவர், விநாயகர், மேலகோவில் சுப்பிரமணிய சுவாமி, நெல்லையப்பர் ஆகிய சுவாமி கோவில்களுக்கும் பாலாலயம் நடந்தது.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவுன்சிலர் சுதா மூர்த்தி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தி தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்