12 கிலோ குட்கா பறிமுதல்; வாலிபர் கைது

பரப்பாடி பகுதியில் 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-29 19:49 GMT
இட்டமொழி:

பரப்பாடி மெயின் பஜாரில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் நேற்று பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பரப்பாடி அருகே உள்ள பொத்தையடி ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராமதாஸ் (வயது 36) என்பதும், பரப்பாடியை சேர்ந்த ரோஸி (50) என்ற பெண்ணுடன் சேர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்ய காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராமதாசை போலீசார் கைது செய்து, 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். ரோஸியை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்