கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் மீது வழக்கு
நெல்லை அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி, நெல்லை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கல்லூரியின் முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் மீது வழக்கு
விசாரணையில், மாணவி சக நண்பர்களுடன் பேசியதை கல்லூரி முதல்வர் ரவிகுமார், அவருடைய உதவியாளர் சிவா ஆகிய 2 பேரும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி முதல்வர் ரவிகுமார், உதவியாளர் சிவா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.