போலீஸ் ஏட்டு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

போலீஸ் ஏட்டு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2022-04-29 19:12 GMT
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது70). இவர் நெற்குணம் கிராமத்திலுள்ள ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெற்குணம் பஸ் நிறுத்தம் அருகே பெரியம்மாள் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது கை.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் ரமேஷ் (40) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நெற்குணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நெற்குணம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக பெரியம்மாள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பெரியம்மாள் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பெரியம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்