கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர்-எளம்பலூர் சாலை கீரின் சிட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 47). இவர் பெரம்பலூர்-திருச்சி மெயின் ரோட்டில் காமராஜர் வளைவு அருகே இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து செந்தில்குமார் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை செந்தில்குமாரின் கடையின் ஷட்டர் கதவு பாதியளவு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் கதவு திறக்கப்பட்டதும், மேலும் கடையின் கல்லாவில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததும் தெரிவந்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.