மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-29 18:36 GMT
கரூர்
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 25). இவர் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் தங்கராஜ், ரோஜாவை அடித்து துன்புறுத்தி பிரச்சினை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதைக்கேட்ட ரோஜாவை, தான் வேறு திருமணம் செய்யவுள்ளதாகவும் அதனால் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி தங்கராஜ். ரோஜாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து ரோஜா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ரோஜா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டாராம். 
இந்த  நிலையில் ரோஜா பள்ளி சான்றிதழை எடுப்பதற்காக தங்கராஜ் வீட்டிற்கு சம்பவத்தன்று சென்றபோது தங்கராஜ் ரோஜாவை திட்டி அடித்து தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்தால்அடித்து ஆற்றில் தூக்கிப் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த ரோஜா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்