இலவச மருத்துவ முகாம்
சிங்கம்புணரியில் இலவச மருத்துவ முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில். பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு வந்தவர்களை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு வரவேற்றார். சிங்கம்புணரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து ஆகியோர் தலைைம தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு மருத்துவ முகாமை ெதாடங்கி வைத்தார்.
முகாமில் நோய் கண்டறிதல், மக்கள் நல பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல், தாய் சேய் நலம், தடுப்பூசி சேவைகள், காச நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை பரிசோதனைகள் இடம் பெற்றன. முகாமில் 1,675 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, காங்கிரஸ் நகர தலைவர் தாயுமானவன், வட்டார தலைவர் ஜெயராமன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்