மேலும் ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்

தேவகோட்டை அருகே மேலும் ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-29 18:26 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது முப்பையூர். அங்கு வெளியூரைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்கு கடைகளை பிடித்து அதில் பாக்குமட்டை தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 31 பான் பராக், குட்கா மூடைகளை இறக்கிய போது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மேலும் தகவல் கிடைத்து குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மற்றொரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 குட்கா, பான்பராக் மூடைகளை கைப்பற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்