லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தாளியம் பட்டியை சேர்ந்தவர் சங்கர் (34). லாரி டிரைவர். இவர் பெரம்பலூரில் இருந்து திருப்பூரை நோக்கி ஒரு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மரவாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (39). அரசு பஸ் டிரைவர். இவர் அரசு பஸ்சில் காரைக்குடியில் இருந்து திருப்பூரை நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். தென்னிலை அருகே கூனம்பட்டி பிரிவு என்ற இடத்தில் முன்னே சென்ற லாரியை, அரசு பஸ் முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் அரசு பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.