மகாராஷ்டிரவரில் புதிதாக 148 பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் இன்று புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-04-29 18:26 GMT
கோப்பு படம்
மும்பை,
மராட்டியத்தில் நேற்று  165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இன்று பாதிப்பு சற்று குறைந்தது. அதன்படி 148 பேர் நோய் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதில் மும்பையில் மட்டும் 93 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 
தற்போது மாநிலம் முழுவதும் 979 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் சாங்கிலி, சிந்துதுர்க், சத்தாரா உள்பட 13 மாவட்டங்களில் நோய் தொற்று கண்டறியப்படவில்லை.

மேலும் செய்திகள்