பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அரவக்குறிச்சி,
ரம்ஜான் பண்டிகையையொட்டி அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் ரிபாய்தீன் ஹசனி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் குத்புதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் தமீம், வேலப்பாடி ஊராட்சி தலைவர் ராணி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.