சங்க கால நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை

சங்க கால நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2022-04-29 18:16 GMT
கரூர்
கரூர், 
கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 131-வது பிறந்த நாள் மற்றும் தமிழ்க்கவிஞர்கள் நாளை முன்னிட்டு கரூர் வட்டாட்சியர் அலுவலக முகப்பில் உள்ள சங்க கால புலவர்களான கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மாலை அணிவித்து மலர்தூவி சிறப்பு செய்தார். அதனை தொடர்ந்து சங்கப்புலவர்கள் குறித்த சொற்பொழிவு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தொடங்கி வைத்து உரை ஆற்றினார். கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி வரவேற்றார். திருக்குறள் பேரவைத் தலைவர் மேலை பழநியப்பன், முன்னாள் முதல்வர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடவூர் மணிமாறன், தமிழ்ச்செம்மல் விருதாளர் எழில்வாணன் ஆகியோர் சங்கப் புலவர்கள் பன்னிருவர் குறித்து சொற்பொழிவு ஆற்றினர். இதில் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்