ஒன்றியக்குழு கூட்டம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது.

Update: 2022-04-29 18:04 GMT
பொறையாறு
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது:-
ராஜ்கண்ணன்:- மாமாக்குடி-பூந்தாழை சாலையை சீரமைக்க வேண்டும். ஆக்கூர் எம்.ஆர்.எம்.மில் முதல் சவுரியாபுரம் வரை மின்விளக்கு வசதி அமைத்து தர வேண்டும். மடப்புரம் பெரியசாவடி குளத்தின் அருகே உள்ள சத்தியவான் வாய்க்காலை தூர்வார வேண்டும். 
மோகன்தாஸ்:-கிடாரங்கொண்டான் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். நாச்சிகட்டளை-தலையுடையவர்கோவில் இடையே காந்தி நகரில் பாலம் அமைக்க வேண்டும்.
வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு
மைதிலி:-மேமாத்தூர்-காசான்தட்டை, கண்டியன்கடலி, அன்னவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
முத்துலட்சுமி:- நிலத்தடி நீர் வீணாவதை தடுக்கவும், ஆறுபாதி சத்தியவாணன் வாய்க்காலில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். 
வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
ரஜினி:- சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை ஆகிய ஊராட்சிகளில் உள்ள வாய்க்கால்களை மழைக்காலம் தொடங்குவதற்குள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமங்கலம் ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள அய்யாவையனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். சேமங்கலம் ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும்.
தேவிகா:- நல்லாடை- சங்கரன்பந்தல் மற்றும் இலுப்பூர் மெயின்ரோட்டில் வீரசோழன் ஆற்றின் கரையில் கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ராஜேஸ்வரி:- சின்னங்குடி பால்வாடியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். மருதம்பள்ளம் சாலையை சீரமைக்க வேண்டும்.
மலர்:-மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் சீதையான் குளம் தூர் வாரி படித்துறை அமைத்து தரவேண்டும். தெற்கு மந்தாங்கரை சாலையை சீரமைத்து தரவேண்டும்.
நடவடிக்கை
சக்கரபாணி:- ஊராட்சி பகுதிகளுக்கு வரும் கொள்ளிடம் கூட்டு குடி நீரை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். ஊராட்சி குடிநீரில் இணைக்க கூடாது.
தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் பேசுகையில், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்