பர்கூர், காவேரிப்பட்டணம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

பர்கூர், காவேரிப்பட்டணம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-29 17:36 GMT
பர்கூர்:
பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஜெகதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர்பள்ளம் பகுதி பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ராமஆவதர்  (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலையில் நடுபையூர் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட 11 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக நடுபையூரை சேர்ந்த தர்மலிங்கம் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்