போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து
போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள மேல்செங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் போச்சம்பள்ளியில் திருப்பத்தூர் சாலை அருகே இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் கேன்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். கடையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான டயர்கள், ஆயில் கேன்கள், உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.