கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினர் அளித்த, 39 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். கூட்டத்தின் முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொகுப்பு நிதியில் இருந்து, 20 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ.4.41 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர்கள் வேலு, சீனிவாசன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.