தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-29 17:35 GMT
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்து சமீபத்தில் தாலி கட்டியுள்ளார். இதுகுறித்து மற்ற மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியையிடம் முறையிட்டனர். இதையடுத்து பள்ளி தலைமை  ஆசிரியை அந்த மாணவர் மற்றும் மாணவியை கண்டித்தார். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன் தலைமையிலான கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்