ஊத்தங்கரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
ஊத்தங்கரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பொம்மதாசம்பட்டியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 35). தொழிலாளி. இவர் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பாட்டி மற்றும் சித்தியிடம் கூறி உள்ளாள். இதையடுத்து அவர்கள் சிறுமியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமனை கைது செய்தனர்.