தர்மபுரியில் விவசாய கண்காட்சி

தர்மபுரியில் விவசாய கண்காட்சி நடந்தது.

Update: 2022-04-29 17:35 GMT
தர்மபுரி:
ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் விவசாயம், தோட்டக்கலை மற்றும் பால் பண்ணை கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, மருதம் நெல்லி கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்த், வாணியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் பொம்மிடி முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
இதைத் தொடர்ந்து "நஞ்சே நஞ்சே"என்ற விழிப்புணர்வு பாடலை அகில இந்திய விவசாயிகள் நல சங்க பொதுச்செயலாளர் நல்லுசாமி வெளியிட்டார். இதில் ஆடிட்டர் பழனிசாமி, ஓய்வுபெற்ற பாரத வங்கி மேலாளர் கோவிந்தராஜுலு, இயற்கை விவசாயி வேடியப்பன், திரைப்பட இயக்குனர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பாடலாசிரியர் ஆடிட்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர் நல்லியப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்