ராமியனஅள்ளி கிளை நூலகம் சார்பில் உலக புத்தக தின விழா
ராமியனஅள்ளி கிளை நூலகம் சார்பில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
மொரப்பூர்:
கடத்தூர் ஒன்றியம், ராமியனஅள்ளி கிளை நூலகம் சார்பில் உலக புத்தக தின விழா சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் தலைமை தாங்கினார். நூலகர் சண்முகம், ஆசிரியர் தங்கமணி, விடுதி காப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் வேடியப்பன் வரவேற்று பேசினார். விழாவில் நில அளவை ஆய்வாளர் அண்ணா குபேரன் கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தக கண்காட்சி, பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கிளை நூலகர் சரவணன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் அன்பழகன் தனது சொந்த பணத்தை செலுத்தி 25 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்த்தார். இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அரங்கண்ணல் நன்றி கூறினார்.