போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு

பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-04-29 17:26 GMT
வேலூர்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேலூர் மாவட்டம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே கட்டுரை, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில், வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் தொல்காப்பியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்