எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு நாளை வருகை மே தின பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வாருங்கள் தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு

கள்ளக்குறிச்சியில் நாளை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் மே தின பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வருமாறு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

Update: 2022-04-29 17:20 GMT

கள்ளக்குறிச்சி

பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறவுள்ளது. 
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

குமரகுரு பார்வையிட்டார்

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இடைத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு நேரில் பார்வையிட்டு மேடை அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், அரசு, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, செண்பகவேல், மணிராஜ், பழனி, சந்தோஷ், கதிர்.தண்டபாணி, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணியின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொண்டர்களுக்கு அழைப்பு

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெற உள்ள மே தின பொதுக்கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், ஜெயலலிதா பேரவை, வழக்கறிஞர் பிரிவு, எம்.ஜி.ஆர். மன்றம், சிறுபான்மை பிரிவு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உள்பட சார்பு அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் அலைகடலென திரண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்