ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
சாலை போக்குவரத்து விதிகளை மீறிய ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வெளிப்பாளையம்:
நாகை-நாகூர் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சாலை போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்குவது கிடையாது.மேலும் பயணிகளை ஏற்ற போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நாகை காடம்பாடி அரப்ஷா தர்கா அருகே வெளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இன்றி சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 15 ேஷர் ஆட்டோ டிரைவர்களுக்கும், 15 மோட்டார் சைக்கிள்களுக்கும் ரூ.1,300 அபராதம் விதித்தனர்.