பிளஸ்-2 பொதுத்தேர்வை 36,555 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 36,555 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-04-29 17:13 GMT
மதுரை, 
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 36,555 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று நடந்தது. இதில் மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வை 487 பள்ளிகைள சேர்ந்த 40,411 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 
இதற்கிடையே, வருகிற 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், வருகிற 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், வருகிற 10-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறை அலுவ லர்கள் செய்து வருகின்றனர். 
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மையங்கள் 9 இடங்களில் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டு உள்ளது. 
149 தேர்வு மையங்கள்
அதன்படி, இந்த வருடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மதுரை மாவட்டத்தில் 40,411 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில் 20,653 மாணவர்களும், 19,758 மாணவிகளும் அடங்குவர்.
 இவர்களுக்கு 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
இந்த தேர்வுகள் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை 325 பள்ளிகளில் இருந்து 17,892 மாணவர்களும், 18,663 மாணவிகளும் என 36,555 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான தேர்வு 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 பொதுத் தேர்வை 323 பள்ளிகளில் இருந்து 18,728 மாணவர்களும், 18,714 மாணவிகளும் என 37,442 பேர் எழுதுகின்றனர்.
சிறப்பு அனுமதி
 இவர்களுக்கான தேர்வு 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிகிறது. இதற்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கண்பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் தேர்வு நடத்தப் படுகிறது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வை 253 பேரும், பிளஸ்-1 தேர்வை 188 பேரும், பிளஸ்-2 தேர்வை 161 பேரும் எழுதுகின்றனர்.

மேலும் செய்திகள்