நவ்நீத் ரானா எம்.பி.க்கு வீட்டு உணவு வழங்க கோர்ட்டு மறுப்பு
ஜெயிலில் நவ்நீத் ரானா எம்.பி.க்கு வீட்டு உணவு வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது.
மும்பை,
ஜெயிலில் நவ்நீத் ரானா எம்.பி.க்கு வீட்டு உணவு வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது.
வீட்டு உணவு
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக கூறி 2 பிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக அமராவதி சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ. கடந்த சனிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மறுப்பு
இந்தநிலையில் அவர்கள் ஜெயிலில் வீட்டு உணவுக்கு அனுமதி கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் மனுவை விசாரித்த கோர்ட்டு நவ்நீத் ரானா, ரவி ரானாவுக்கு வீட்டு உணவுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.