கொம்பேரி மூக்கன் பாம்பு பிடிப்பட்டது
வீட்டுக்குள் நுழைய முயன்ற கொம்பேரி மூக்கன் பாம்பு பிடிப்பட்டது
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி குறவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமண்ணன். இவரது வீட்டில் 5 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பு நுழைய முயன்றது. இதனை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர் மேலும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
அதேபோல நாட்டறம்பள்ளி அருகே மேலூர் பகுதியில் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறிவிழுந்த கோழியை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இருந்து உயிருடன் மீட்பு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.