2 வீடுகளில் பணம், நகை திருட்டு

2 வீடுகளில் பணம், நகை திருட்டு;

Update: 2022-04-29 16:56 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஜோதி நகரை சேர்ந்தவர் இப்ராகிம் சுல்தான்(வயது 25). சிவில் என்ஜினீயர். இவர் தொழுகையில் கலந்துகொள்வதற்கு நேற்று  இரவில் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்றார். இன்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. 

இதேபோன்று மாக்கினாம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (69) தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 27-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். இன்று திரும்பி வந்து பார்த்தபோது, கதவை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.60 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்